மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்.. மீன்கள், மீன்பிடி உபகரணங்களை அபகரித்து சென்றதாக புகார்..
காங்கிரஸ் வலிமை குன்றினால் அவ்விடத்தை மாநிலக் கட்சிகள் பிடிக்கும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
எதிர்க்கட்சியின் இடத்தை மாநிலக் கட்சிகள் பிடித்து விடாமல் இருக்க காங்கிரஸ் வலிமையாக இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தின் புனேயில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜனநாயகத்துக்கு வலிமையான எதிர்க்கட்சி தேவை எனக் குறிப்பிட்டார்.
ஜனநாயகம் என்பது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு சக்கரங்களால் இயங்குவதாகத் தெரிவித்தார்.
காங்கிரஸ் வலிமை குன்றினால் அந்த இடத்தை மாநிலக் கட்சிகள் பிடித்துக்கொள்ளும் என்றும், அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
Comments