தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிநாடு புறப்பட தயாராக இருந்த கப்பலில் இருந்து கடலில் குதித்த தொழிலாளர்களால் பரபரப்பு
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வெளிநாடு புறப்பட தயாராக இருந்த கப்பலின் கயிறு எடுத்துவிடும் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட மறுத்த நிலையில், அது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் சில தொழிலாளர்கள் கடலில் குதித்து போராட்டம் நடத்தினர்.
தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வரும் நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட தயாராக இருந்த சரக்கு கப்பலை வெளியே அனுப்ப கயிறு எடுத்துவிடும் தொழிளாலர்களுக்கு துறைமுக நிர்வாகம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
வேலை நிறுத்த போராட்டத்தை காரணம் காட்டி தொழிலாளர்கள் தரப்பில் கயிறை எடுத்துவிட மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து துறைமுக அதிகாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அங்கு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த போது திடீரென இரு தொழிலாளர்கள் கடலில் குதித்தனர்.
Comments