லட்சுமி நரசிம்மர் ஆலயமான யதாதரி கோவில் புதுப்பிக்கப்பட்டது.. இன்று கும்பாபிஷேகத்தில் முதலமைச்சர் டி.ஆர்.எஸ் கலந்துகொள்கிறார்
தெலங்கானா மாநிலத்தில் சுமார் ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில், 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பழமையான இந்தக் கோவிலைப் புதுப்பிக்கும் பணி கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது.
இன்று நடைபெறும் கும்பாபிஷேக விழாவில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். மாலை 4 மணிக்குப் பிறகு பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழுவதும் கற்களால் மட்டுமே கட்டப்பட்ட இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டு பழமையானதாகும்.
Comments