உக்ரைன் - ரஷ்யா இடையே இன்று தொடங்கி 3 நாள் சமாதானப் பேச்சுவார்த்தை
கடுமையான போர் மூண்ட நிலையில் ரஷ்யாவும் உக்ரைனும் இன்று முதல் 3 நாட்களுக்கு துருக்கியில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளன.
இருநாட்டு அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்த நேரடிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றன. இதில் ஆறு முக்கிய அம்சங்களில் நான்கு அம்சங்களில் இருதரப்பிலும் உடன்பாடு எட்டப்பட்டதாக பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த துருக்கி அதிபர் தாயிப் எரோடகன் தெரிவித்துள்ளார்.
நேட்டோவில் உக்ரைன் இணையாதது, உக்ரைனில் ரஷ்ய மொழிப் பயன்பாடு, ஆயுதக் குறைப்பு மற்றும் பாதுகாப்பு உத்தரவாதம் ஆகியவற்றில் இருதரப்பிலும் ஒத்த கருத்து ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இருநாடுகளுக்கும் இடையிலான யுத்தம் இன்று 33 வது நாளை எட்டியுள்ள நிலையில், பல்வேறு முக்கிய நகரங்களில் ரஷ்யாவின் பீரங்கிகள் குண்டு மழை பொழிந்து தகர்த்து தரைமட்டமாக்கி வருகின்றன. மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு போர் விமானங்களையும் பீரங்கிகளையும் வழங்குமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments