கோவா முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் பிரமோத் சாவந்த் : விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
கோவா மாநில முதலமைச்சராக பிரமோத் சாவந்த் 2-வது முறையாக இன்று பதவியேற்கிறார். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Comments