ஒரே நாளில் 62 பேரை சுட்டுக் கொலை செய்த பயங்கரவாத கும்பல் : எல் சால்வடாரில் அவசர நிலை பிரகடனம்
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் இரு நாட்களில் மட்டும் 74 பேர் படுகொலைச் செய்யப்பட்டதை அடுத்து அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
நாட்டில் இதுவரை இல்லாத அளவாக கடந்த சனிக்கிழமை மட்டும் 62 பேரை பயங்கரவாத கும்பல்கள் துப்பாக்கியால் சுட்டு கொலைச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அதிபர் நயீப் புக்ளே தாக்குதல் செய்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததையடுத்து நாடு முழுவதும் அவசர நிலை அமலானது.
பொது வெளியில் அதிகளவில் மக்கள் கூடத் தடை, பயங்கரவாத கும்பல்களின் தொடர்புகளை துண்டிக்கும் நடவடிக்கை, நிர்வாக காவல் நீட்டிக்கபடும் என்றும், பொது மக்கள் இயல்பு வாழ்க்கை கெடாது என்றும் அதிபர் நயீப் புக்கலே தெரிவித்தார்.
Comments