இரண்டு நாள் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்
நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக இன்று வங்கி, காப்பீடு, போக்குவரத்து, தபால்துறை, தொலைத் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தனியார்மயக் கொள்கைகளைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்றும், நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார்மயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர்களும் 2 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
வங்கி சேவைகள், மின்சாரம், போக்குவரத்து, போன்றவை இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
20 கோடி தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தொழில்சங்க அமைப்புகள் தெரிவித்துள்ளன.இந்தப் போராட்டத்துக்கு ரயில்வே யூனியன்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி ஆதரவு தெரிவிக்க திட்டமிட்டுள்ளன.
இந்தப் போராட்டத்தில் வங்கி சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளை செய்திருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
அரசு அலுவலகங்கள் அனைத்தும் திறந்திருக்கும் என்றும் அரசு ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
தமிழகத்திலும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.அதே நேரத்தில் இன்றும், நாளையும் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Comments