மனித உடலில் இருந்து எடுத்த ரத்த மாதிரிகளில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் - விஞ்ஞானிகள் அதிர்ச்சி
மனித உடலில் இருந்து எடுத்த ரத்த மாதிரிகளில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை நெதர்லாந்து விஞ்ஞானிகள் முதன்முறையாக கண்டறிந்துள்ளனர்.
விஞ்ஞானிகள் ஆய்வு செய்த ரத்த மாதிரிகளில் கிட்டத்தட்ட 50 சதவீத மாதிரிகளில் குளிர் பானங்கள் அடைத்து விற்கப்படும் பெட் பாட்டில்களின் நுண்துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்படடதாக சர்வதேச சுற்றுச்சூழல் அறிவியல் பத்திரிக்கையில் அவர்கள் ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளனர்.
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 22 ரத்த மாதிரிகளில் சுமார் 80 சதவீத மாதிரிகளில் எதோ ஒரு வகையான பிளாஸ்டிக் கழிவு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிளாஸ்டிக் கழிவுகள் காற்று , குடிநீர், உணவு மூலம் உடலுக்குள் புகுந்திருக்கலாம் என தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், டூத் பேஸ்ட், லிப் கிளாஸ், டேட்டூவுக்கு பயன்படுத்தப்படும் மை உள்ளிட்ட பொருட்கள் மூலமும் ரத்தத்தில் கலந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர்.
Comments