இலங்கை அகதிகள் தமிழகத்திற்குள் வருவதை கண்காணிக்கும் பணி தீவிரம்

0 1759
இலங்கை அகதிகள் தமிழகத்திற்குள் வருவதை கண்காணிக்கும் பணி தீவிரம்

இலங்கையில் இருந்து வரும் அகதிகளைக் கண்காணிக்கும் வகையில், நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் நவீன ஹோவர் கிராப்ட் படகு மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தபட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியாலும் உணவு பொருட்களின் விலைவாசி அதிகரிப்பாலும் அங்குள்ள மக்கள், தமிழகத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.

கடல் மார்க்கமாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்த சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இலங்கையில் இருந்து மேலும் பலர் அகதிகளாக தமிழகத்திற்கு வரக்கூடும் என்பதால் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து மூலம் கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு உணவு, தங்கம், எரிபொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுகிறதா? எனவும் கடந்த ஒரு வார காலமாக கண்காணித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments