அமீரக பயணம் முழுமையாக வெற்றியைத் தந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2272
அமீரக பயணம் முழுமையாக வெற்றியைத் தந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமீரக பயணம் முழுமையாக வெற்றியைத் தந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடலில், கடல் கடந்து சென்று கை நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அதற்கேற்ற முதலீடுகளையும் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அமீரகப் பயணத்தைப் பற்றி ஒரு சிலர் அரசியலுக்காகப் பேசி தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள நினைத்தாலும், மக்கள் மனதளவில் பாராட்டுவதாக முதலமைச்சர் கூறினார்.

அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என அவர் கூறியுள்ளார்.மேலும், நாளை அபுதாபியில் உள்ள மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே துபாயில் உள்ள எதிர்கால அருங்காட்சியகத்தை அவர் பார்வையிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments