தொலைநோக்கி மூலம் இயற்கை அழகை கண்டு ரசிக்கும் தொட்டபெட்டா காட்சிமுனை, சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பு
உதகை தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்லும் சாலைகள் சீரமைப்புப் பணி முடிவடைந்ததையடுத்து சுற்றுலாப்பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பெய்த கனமழையால் தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லக்கூடிய சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகள் பழுதடைந்தன.
இதனால் அந்த சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு வனத்துறை மூலம் சீரமைப்பு பணிகள் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடந்து வந்தன.
34 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட சாலை சீரமைப்பு பணிகள் தற்போது நிறைவடைந்திருப்பதையடுத்து தொட்டபெட்டா காட்சி முனையை சுற்றுலாப்பயணிகள் பார்வையிட வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
Comments