மேற்கத்திய நாடுகள் தங்கள் ஆயுதங்களின் ஒரு பகுதியை உக்ரைனுக்கு தர வேண்டும் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

0 3492
மேற்கத்திய நாடுகள் தங்கள் ஆயுதங்களின் ஒரு பகுதியை உக்ரைனுக்கு தர வேண்டும் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

மேற்கத்திய நாடுகள் தங்களது சேமிப்புக்கிடங்கில் வைத்திருக்கும் ராணுவ ஆயுதங்களின் ஒரு பகுதியை உக்ரைனுக்கு தர வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.

வீடியோ வழியாக இந்த கோரிக்கையை விடுத்த அவர், ரஷ்யாவைக் கண்டு அஞ்சுகிறீர்களா? என மேற்கத்திய நாடுகளுக்கு கேள்வி எழுப்பினார். பல்வேறு நாடுகள் தங்களுக்கு ஆயுத எதிர்ப்பு கவசங்கள், விமான வழி ஏவுகணை தடுப்பு அமைப்புகளையும், சிறிய ஆயுதங்களையும் வழங்குவதாக தன்னிடம் உறுதியளித்திருப்பதாக கூறிய ஜெலன்ஸ்கி, ஆனால் உக்ரைனுக்கு தற்போது டேங்குகள், விமானங்கள், கப்பல் தடுப்பு அமைப்புகளே தேவைப்படுவதாக கூறினார்.

இதனிடையே நேற்று போலந்து அதிபர் ஆண்டர்செஜ் டூடாவி டம் பேசியபோது, ரஷ்ய தயாரிப்பு போர் விமானம் இன்னும் உக்ரைனுக்கு அனுப்பப்படாதது தொடர்பாக ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்ததாக அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments