உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்தினால், ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் நீக்கப்படும் - இங்கிலாந்து
உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்தினால், ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் நீக்கப்படும் என இங்கிலாந்து அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதனை கண்டித்து பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
அந்த வரிசையில், இங்கிலாந்தும், ரஷ்யாவுக்கு சொந்தமான சுமார் 5ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதோடு, மேலும், அந்நாட்டு தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் மீதும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் Liz Truss, உக்ரைனில் இருந்து படைகளை திரும்பப் பெற்றால், ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்திலும் உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டோம் என ரஷ்யா உறுதியளிக்க வேண்டும் என அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
Comments