132 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய சீன விமானத்தின் 2ஆவது கருப்புப் பெட்டி கண்டெடுப்பு

0 1573
132 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய சீன விமானத்தின் 2ஆவது கருப்புப் பெட்டி கண்டெடுப்பு

சீனாவில் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை 132 பேருடன் குன்மிங்கில் இருந்து குவாங்சூ நகருக்குச் சென்ற போயிங் விமானம் ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதில் இருந்த பயணிகள், விமானிகள் அனைவரும் உயிரிழந்ததாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானிகளின் குரல்பதிவு அடங்கிய முதல் கருப்புப் பெட்டி புதனன்று கண்டெடுக்கப்பட்டது. இரண்டாவது கருப்புப் பெட்டியைத் தேடிவந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய இந்தப் பெட்டியில் உள்ள தகவல்கள் உதவும் எனக் கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments