அரசியல் கட்சி பிரமுகரின் மகளுக்காக முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு டி.சி.கொடுத்த பள்ளி முதல்வரை ராமேஸ்வரத்தில் வைத்து கைது செய்த போலீசார்.!
ஆந்திர மாநிலம் சித்தூரில் அரசியல் கட்சி பிரமுகரின் மகளுக்காக, முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு டி.சி.வழங்கியதோடு, அவரை அவதூறாக பேசியதால், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி முதல்வரை ராமேஸ்வரத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
பலமனேரி பகுதியிலுள்ள பிரம்மர்ஷி பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மிஸ்பா என்ற மாணவி தொடர்ந்து முதல் மதிப்பெண் பெற்று வந்தார்.
அதே பள்ளியில் படித்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுனில் என்பவரின் மகள் பூஜிதா, அனைத்து தேர்வுகளிலும் இரண்டாவது இடத்தை பிடித்த நிலையில், சுனில் சொன்னதைக் கேட்டு, பள்ளி முதல்வர் ரமேஷ், மிஸ்பாவுக்கு டி.சி.வழங்கியதோடு, அவரை சக மாணவிகள் முன்னிலையில் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த மாணவி மிஸ்பா கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், ராமேஸ்வரத்தில் தலைமறைவாகியிருந்த பள்ளி முதல்வர் ரமேஷை போலீசார் கைது செய்தனர்.
Comments