எங்கு சென்றாலும் தமிழையும், தமிழ்நாட்டையும் விட்டுவிடக்கூடாது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

0 2246
எங்கு சென்றாலும் தமிழையும், தமிழ்நாட்டையும் விட்டுவிடக்கூடாது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில், நான்கு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள அலயக வாழ் தமிழர்களிடையே உரையாற்றினார்.

நம்மில் ஒருவர் நம்ம முதல்வர் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தாயின் கனிவோடு உலகெங்கும் வசிக்கும் தமிழர்களை திமுக அரசு பாதுகாக்கும் எனக் குறிப்பிட்டார்.

நாடு, நிலம் நம்மை பிரித்தாலும் தமிழ் மொழி இணைக்கிறது என்ற முதலமைச்சர், வெளிநாடு வாழ் தமிழர்கள் தாங்கள் வாழும் நாட்டின் வளம், அறிவு, தொழில்நுட்பத்தை தமிழகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டும் எனவும், அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துக்குமான வளர்ச்சி என்கிற இலக்கை முன்வைத்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

மரம் எவ்வளவு உயரமாக வளர்ந்தாலும் அது தன்னுடைய வேரை விட்டுவிடாமல் இருப்பது போல், எங்கு சென்றாலும் தமிழையும், தமிழ்நாட்டையும் விட்டுவிடாதீர்கள் எனவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments