போரினால் துவண்டு போயுள்ள உக்ரேனிய குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ச்சிப்படுத்திய சூப்பர் ஹீரோக்கள்.!

0 1991

போரினால் துவண்டு போயுள்ள உக்ரேனிய குழந்தைகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஆங்கில திரைப்படத்தில் வரும் பிரபல கதாபாத்திரங்களின் உடைகளை அணிந்து வந்து இளைஞர்கள் சிலர் குழந்தைகளுடன் விளையாடி உற்சாகப்படுத்தினர்.

கீவ், கார்கிவ், மரியுபோல் நகரங்களை சுற்றி வளைத்த ரஷ்ய படைகள், தொடர்ந்து ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஆங்காங்கே குண்டுகள் வீசப்படுவதால் சுரங்கப்பாதைகளிலும், பதுங்குக் குழிகளிலும் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், கார்கிவ்-வில் உள்ள மெட்ரோ சுரங்கத்தில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகளுடன் விளையாடி இளைஞர்கள் மகிழ்ச்சிப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments