'காஷ்மீர் பைல்ஸ்' படத்தை பாருங்கள் என்று அமித் ஷா பரிந்துரை.!

0 1978

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் காஷ்மீரை தீவிரவாதம் எப்படி ஆக்கிரமித்தது என்பதைத் தெரிந்துக் கொள்ள காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தைப் பார்க்குமாறு மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தை வெளிப்படையாகப் பாராட்டிய நிலையில் குஜராத்தின் காந்தி நகரில் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, பிரதமர் மோடி இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியதாகக் குறிப்பிட்டார்.

மோடியைப் போல வலிமையான தலைவர் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து கொண்ட நேரம் அது என்றும் அமித் ஷா குறிப்பிட்டார். இந்திய மக்களுக்கு மோடியின் தலைமை மீது நம்பிக்கை உள்ளதை அண்மையில் கிடைத்த தேர்தல் முடிவுகள் உறுதி செய்திருப்பதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments