பிலிப்பைன்ஸில் டால் எரிமலையில் விண்ணை முட்டும் அளவுக்கு புகை வெளியேறுவதால் அவசர நிலை அறிவிப்பு.!

0 1952

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அடுத்துள்ள டால் எரிமலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு புகை வெளியேறுவதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டு அருகில் குடியிருக்கும் ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

சிறிய எரிமலையாக டால் கருதப்பட்டாலும் வெடித்து சிதறும் வாய்ப்புள்ளதாக நிலஅதிர்வு மற்றும் எரிமலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எரிமலையில் இருந்து ஏறத்தாழ ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்திற்கு மேல் விண்ணில் கரும் புகை சூழ்ந்து காட்சி அளிக்கிறது.   எரிமலைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments