தாயில்லா சிறுமியிடம் 2 மாதங்களாக மிரட்டி அத்துமீறிய 5 அரக்கர்கள்..!

0 4505

செங்குன்றத்தில் வீட்டில் தனியாக இருந்த 7ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனரின் மகளான 13வயது சிறுமிக்குத்தான் இந்த கொடுமை நடந்துள்ளது.

தாய் வேறு ஒருவருடன் சென்று விட்ட நிலையில் குடிபோதைக்கு அடிமையான தந்தையும் வீட்டிற்கு சரியாக வராததால், மெக்கானிக் வேலை பார்த்து வரும் 15 வயது சகோதரரின் பராமரிப்பில் இருந்த சிறுமி அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார்.

தனது சகோதரரின் கூட்டாளியான சந்தோஷ் என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட ரவுடி கும்பலுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.

அந்த கும்பலுக்கு பயந்து சந்தோஷ் வீட்டை காலி செய்து வேறு இடத்துக்கு சென்றுவிட்ட நிலையில், அந்த பெண்ணின் சகோதரர் பெரியப்பா வீட்டிற்கு சென்று தங்கி இருந்துள்ளார். கடந்த பிப்ரவரி 3 ந்தேதி வீட்டில் அந்த மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அவரது சகோதரரை தாக்குவதற்காக வீடு தேடி வந்த 5 பேர் கொண்ட ரவுடி கும்பல் மாணவி தனியாக இருப்பதை பயன்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் பிப்ரவரி 8ஆம் தேதி போதையில் வீடு புகுந்த அந்த 5 பேர் கும்பல் சிறுமியிடம் அத்துமீறி அட்டகாசம் செய்ததாக கூறப்படுகின்றது. அன்றிலிருந்து தொடர்ந்து மாணவியிடம் கடுமையான அத்துமீறல்களை தொடர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த சிறுமி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல்துறயினரின் பரிந்துறையின் பேரில் இந்த வழக்கு குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

இதில் தனக்கு அந்த 5 பேர் கொண்ட போதைக்கும்பலால் நிகழ்ந்த அத்துமீறல்களை விரிவாக எடுத்துக் கூறினார்.

இதையடுத்து, அந்த மாணவி தெரிவித்த புகார்கள் அனைத்தும் உண்மை என்பது உறுதியானதும், விரைந்து நடவடிக்கை மேற்க்கொள்ள ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை கும்பல் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ஜோதி லட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார் செங்குன்றம் பாலகணேசன் நகரை சேர்ந்த லட்சுமணன், அப்துல், பம்மத்துகுளம் பாபு, நாரவாரி குப்பம் அக்பர், வியாசர்பாடி கௌதம் என ஐந்து பேரை செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் கைது செய்தனர்.இவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 8 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை கொடுத்த போதை கும்பலை விரைவாக கைது செய்த தனிப்படை போலீசாரை ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments