களக்காட்டில் நாள் தவறாமல் கோவில் மணியை அடிக்கும் ஆடு.. வியப்புடன் பார்க்கும் பொது மக்கள்

0 1915
களக்காட்டில் நாள் தவறாமல் கோவில் மணியை அடிக்கும் ஆடு.. வியப்புடன் பார்க்கும் பொது மக்கள்

நெல்லை மாவட்டம் களக்காடில் உள்ள கோயிலில் ஆடு மணி அடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான அந்த ஆட்டை தினமும் காலை அவர் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடும் போது அருகில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்துக்குச் சென்று, கோவில் மணி கட்டப்பட்டுள்ள கயிற்றை தலையால் மோதியும், காலால் இழுத்தும் மணியை அடித்து வருகிறது.

கடந்த ஒரு மாதமாக, காலை மாலை என இரு வேளையும் தவறாமல் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடு மணி அடித்து வருவது அப்பகுதி மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY