காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 8 பேர் துப்பாக்கி முனையில் கைது

0 3745
காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 8 பேர் துப்பாக்கி முனையில் கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடியின் வீட்டில் பதுங்கி இருந்த அவனது கூட்டாளிகள் 8 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய லெனின் என்பவன் சேலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில், அவனது கூட்டாளிகள் 8 பேர் குற்றச்செயலில் ஈடுபடுவதற்காக நடுவீரபட்டில் உள்ள லெனின் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற போலீசார், அவர்கள் 8 பேரையும் துப்பாக்கி முனையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட  ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments