மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கு ஏப்ரல் 4ல் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் துவக்கம்

0 2268
மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கு ஏப்ரல் 4ல் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் துவக்கம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயில தேர்வான மாணவர்களுக்கு ராமநாதபுரத்தில் வகுப்புகள் நடைபெறவுள்ளதாக எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் ராமநாதபுரத்தில் தங்கியிருந்து கல்வி பயில தயாராக வரவேண்டும் என்றும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு என தனித்தனியே விடுதி வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாணவர்கள் சாதாரண உடைகள் அணிந்தே கல்லூரிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments