"வோர்ல்டு பிரஸ் போட்டோ" விருதுக்கு மதுரை புகைப்பட கலைஞர் செந்தில் குமரன் தேர்வு

0 2616
"வோர்ல்டு பிரஸ் போட்டோ" விருதுக்கு மதுரை புகைப்பட கலைஞர் செந்தில் குமரன் தேர்வு

ஆண்டுதோறும், நெதர்லாந்து நாட்டில் வழங்கப்படும் உலகப்புகழ் பெற்ற World Press Photo விருதுக்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் தேர்வாகி உள்ளார்.

இவ்விருதுக்காக இந்தாண்டு 130 நாடுகளைச் சேர்ந்த 4,800 புகைப்பட கலைஞர்கள் 70,000 க்கும் மேற்பட்ட புகைப்படங்களை சமர்பித்திருந்தனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளுக்குச் சென்று, மனித - வன விலங்கு மோதலை வெளிக்கொணரும்  புகைப்படங்களை நேர்த்தியாக எடுத்த செந்தில் குமரன் உள்பட 24 கலைஞர்கள் இவ்விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு விருதும், 1000 யூரோ ரொக்கமும் நெதர்லாந்தில் வைத்து  வழங்கப்பட உள்ளன. செந்தில் குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments