கோவை வெள்ளலூர் பேரூராட்சியை மோதல், அடிதடிக்கு மத்தியில் கைப்பற்றியது அதிமுக

0 2394
கோவை வெள்ளலூர் பேரூராட்சியை மோதல், அடிதடிக்கு மத்தியில் கைப்பற்றியது அதிமுக

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் மோதல், அடிதடிக்கு மத்தியில் நடைபெற்ற தலைவர், துணை தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிப்பெற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி, திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் பேரூராட்சி, விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி பேரூராட்சி துணை தலைவர் பதவிகளுக்கான மறு தேர்தலில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பங்கேற்காததால் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி துணை தலைவராக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கிரிஜா திருமாறன் வெற்றிப்பெற்றார்.இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி தலைவராக சுயேச்சை வேட்பாளர் மணிமேகலை பாக்கியராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோல், கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவராக திமுக வேட்பாளர் பாக்கியலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments