பத்தாம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று திருமணம்.. ஆயுள் தண்டனை 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாக மாற்றம்

0 3268
பத்தாம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று திருமணம்.. ஆயுள் தண்டனை 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாக மாற்றம்

10ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை மாற்றி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடில் விஜயகுமார் என்பவர் 10ஆம் வகுப்பு மாணவியிடம் காதலிப்பதாக கூறி, அவரை திருமணம் செய்ததாக அவரது பாட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த வழக்கில் விஜயகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், விஜயகுமாரின் நண்பர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மூவரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். விஜயகுமாருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாக மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments