86 சவரன் நகை, ரூ.1.20 லட்சம் பணம் திருட்டு.. துப்பாக்கி முனையில் திருடனை கைது செய்த போலீசார்

0 1716
86 சவரன் நகை, ரூ.1.20 லட்சம் திருட்டு.. துப்பாக்கி முனையில் திருடனை கைது செய்த போலீசார்

சென்னையில் 86 சவரன் நகையை திருடி விட்டு கோயம்புத்தூரில் உல்லாசமாக இருந்தத் திருடனை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

வேளச்சேரியில் வயதான தம்பதியர் தனியாக இருந்த வீட்டிற்குள் இரவில் புகுந்த திருடன், அவர்கள் உறங்கி கொண்டிருந்த அறையில் இருந்த பீரோவில் இருந்து 86 சவரன் நகை மற்றும் ஒன்னேகால் லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்றான்.

இது தொடர்பாக, 50 க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது, திருடன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்புத்தூருக்குத் தப்பிச் சென்றது தெரியவந்தது. கோயம்புத்தூருக்கு விரைந்த தனிப்படை போலீசார், அங்கிருந்து சேலம், திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி எனப் பல மாவட்டங்களில் அவனைத் தேடி அலைந்தனர்.

இறுதியில், செல்போன் டவரை வைத்து மேட்டுப்பாளையத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த திருடனை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். முத்துகிருஷ்ணன் என்ற அந்தத் திருடனிடம் இருந்து 52 சவரன் நகை மற்றும் 4.5 லட்ச ரூபாய் பணத்தை போலீசார் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments