தாய், தந்தைக்கு சல்யூட் அடித்து பொறுப்பேற்றுக் கொண்ட கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி..

0 2711

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஹரி கிரண் பிரசாத், தனது பெற்றோருக்கு சல்யூட் அடித்து பொறுப்பேற்றுக் கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஆக இருந்த பத்ரி நாராயணன் கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஆக நியமிக்கப்பட்ட ஹரி கிரண் பிரசாத் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக, பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தனது தாய், தந்தையருக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்திவிட்டு இருக்கையில் அமர்ந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments