ஆர்ஸ்க் கப்பல் சேதமடைந்து கவிழ்ந்ததைக் காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்
தென்கிழக்கு உக்ரைனில் உள்ள பெர்டியன்ஸ்க் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் போர்க்கப்பலை உக்ரைன் படையினர் குண்டு வீசி தாக்கியதில் அது எரிந்து சேதமடைந்து கவிழ்ந்திருப்பதை காட்டும் செயற்கைக்கோள் படங்களை மேக்சர் டெக்னாலஜீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
போர்க்கப்பலில் பிடித்த தீ, துறைமுகத்தில் இருந்த எரிபொருள் சேமிப்பு தொட்டிக்கும் பரவி, அது பற்றி எரிந்த காட்சியும் அதில் இடம்பெற்றுள்ளது. வீரர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை தரையிறக்கப் பயன்படும் அலிகேட்டர் வகை போர்க்கப்பலான ஆர்ஸ்க், சுமார் 400 வீரர்களை ஏற்றிச்செல்லும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கப்பல் தாக்கி அழிக்கப்பட்ட சமயத்தில் உள்ளே அந்நாட்டு படைவீரர்கள் யாரேனும் இருந்தார்களா? எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தொடர்பாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Comments