எரிவாயு, எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்-அதிபர் ஜெலன்ஸ்கி

0 2713
எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நாடுகள் உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நாடுகள் உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

அப்போது தான் ரஷ்யாவால் எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை வைத்துக்கொண்டு மற்ற நாடுகளை மிரட்ட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். வீடியோ வழியாக தோஹாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜெலன்ஸ்கி, எண்ணெய் வளம் மிக்க கத்தாரால் ஐரோப்பாவின் நிலைத்தன்மையை பேணுவதில் பங்கு வகிக்க முடியும் என கூறினார்.

ஐரோப்பாவின் எதிர்காலம் கத்தார் நாட்டின் முயற்சியை சார்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகிக்கும் முதன்மை நாடாக இருந்த ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தது முதலே அந்நாட்டிடம் இருந்து எரிபொருள் விநியோகம் தடைப்படுமோ என்ற கவலைகள் ஏற்பட்டிருந்தன.

இந்த சூழலில், போர் எதிரொலியாக உலக அளவில் மிகப்பெரிய அளவில் தானியங்கள் உற்பத்தி செய்யும் நாடான உக்ரைனிடம் இருந்து தானிய விநியோகம் தடைப்படுமோ என எந்த நாடுகளும் கவலையடையவில்லை என ஜெலன்ஸ்கி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments