பாராசிட்டமால் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு

0 2271
பாராசிட்டமால் உள்ளிட்ட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்த்தப்பட உள்ளது.

பாராசிட்டமால் உள்ளிட்ட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்த்தப்பட உள்ளது.

இது குறித்து இந்திய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 10 புள்ளி 7 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுவான நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் தேசிய பட்டியலில் உள்ள 800 மருந்துகளின் விலை உயரும் என கூறப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணையம் விளக்கமளித்துள்ளது.

இந்த அறிவிப்பால் காய்ச்சல், தொற்று, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள், ரத்த சோகை போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை அதிகரிக்க உள்ளது. இதில் பாராசிட்டமால், அசித்ரோமைசின் உள்ளிட்ட மருந்துகளும் அடங்கும்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments