யுனிடெக் முன்னாள் அதிகாரியின் மனைவி பிரீத்திக்கு நிபந்தனை பெயில்.!
யுனிடெக் முன்னாள் நிர்வாகியான சஞ்சய் சந்திராவின் மனைவி பிரீத்திக்கு கடுமையான நிபந்தனைகளுடன் 5 மணி நேர பெயில் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லியில் காலமான தமது பாட்டியின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொள்ள அனுமதி கோரியிருந்த பிரீத்தியை பெயிலில் விட்டால் அவர் யுனிடெக் வழக்கின் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் என்று அமலாக்கத்துறை சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினரின் கண்காணிப்பில் மொபைல் போன் இல்லாமல், பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு ஜாமீனில் செல்ல நீதிமன்றம் பிரீத்தியை அனுமதித்தது.
போலியான கம்பெனிகள் மூலமாக 410 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை விவகாரத்தில் சிக்கிய யுனிடெக் நிறுவனத்தின் மீதான வழக்கில் 2018 ஆம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த பிரீத்தியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் கைது செய்தனர்.
Comments