ஓசூர் பத்தலப்பள்ளியில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட நில அளவையரை கைது.!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பத்தலப்பள்ளியில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட நில அளவையரை கைது செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
மென்பொறியாளர் ஹரிநாத் என்பவரின் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய நில அளவையர் வடிவேலு, 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஹரிநாத் அளித்த புகாரில் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை நில அளவையர் வடிவேலு வீட்டிற்கு சென்று அவர் மற்றும் தரகர் தமீஸ் ஆகியோரிடம் கொடுக்க வைத்து கையும் களவுமாக பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Comments