திருவள்ளூரில் 8 கோடி ரூபாய் கடனை திருப்பித் தருவதாக கூறி அழைத்து அடியாட்களை வைத்து தன் கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் புகார்.!

0 2517

திருவள்ளூர் மாவட்டம் மாலாத்துரையில் வாங்கிய 8 கோடி ரூபாய் கடனை திருப்பித் தருவதாக கூறி அழைத்து அடியாட்களை வைத்து தன் கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் அளித்த புகாரில் வீடியோ பதிவுகளை கொண்டு விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு கைக் குழந்தையுடன் வந்த சரண்யா என்பவர், தன் கணவர் ஜோதியின் சூப்பர் மார்க்கெட்டை மேம்படுத்துவதாக கூறி, சத்தியமூர்த்தி என்பவர் 8 கோடியே 25 லட்ச ரூபாய் பெற்றதாகவும், பல முறை கேட்டும் பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்திய சத்தியமூர்த்தி, அண்மையில் தன் கடைக்கு வந்தால் பணம் தருவதாக கூறி தன் கணவரை வரவழைத்து அடியாட்களை கொண்டு தாக்கி 22 சவரன் நகையை பறித்துக் கொண்டதாக புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி சரண்யா தெரிவித்துள்ளார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments