பாபா ரோட் ஷாவின் விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு மதுபானம் பிரசாதம்!

0 1515

பஞ்சாப்பில் அமிர்தசரஸில் இஸ்லாமிய புனிதர் பாபா ரோட் ஷாவின் விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு மதுபானம் பிரசாதமாக  வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் இரு நாட்களுக்கு கொண்டாடப்படும் பாபா ரோட் ஷாவின் விழாவில் திரளான பக்தர்கள் மாதுபாட்டிலை காணிக்கையாக செலுத்துகின்றனர். பாபாவின் பாதத்தில் வைக்கப்பட்டு மதுபானம் மீண்டும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழங்கிய மதுபானங்கள் பாபாவின் பாதத்தில் வைக்கப்பட்டு மீண்டும் அவர்களுக்கே பிரசாதமாக  வழங்கப்பட்டது. விழாவில் வாசிக்கப்பட்ட மேள தாளங்களில் பக்தர்கள் நடனமாடியபடி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments