அரசுப் பேருந்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம்.. கூடுதல் பேருந்தை இயக்குமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு கோரிக்கை.!

0 1314

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அரசுப் பேருந்தில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வந்தவாசி, நடுகுப்பம், தெள்ளார், தேசூர், மகமாயிதிருமணி வழியாக வெடால் கிராமத்திற்கு தடம் எண் 2  என்ற பேருந்து மட்டும் இயக்கப்படுகிறது.

இதனால் வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நாள்தோறும் இந்த பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவர்கள் எந்த சிரமமும் இன்றி பயணம் செய்வதற்கு கூடுதலாக அரசு பேருந்தை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments