சீனாவுடனான இந்தியாவின் உறவு இயல்பாக இல்லை - அமைச்சர் ஜெய்சங்கர்
சீனாவுடனான இந்தியாவின் உறவு இயல்பாக இல்லை என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லி வந்த சீன அமைச்சர் வாங் யீயிடம் தெரிவித்துள்ளார்.
இந்திய சீனா உறவு இயல்பு நிலைக்குத் திரும்ப லடாக் எல்லையில் உள்ள சீனப் படைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் இறையாண்மையை மதிக்கும்படியும் அவர் சீனாவுக்கு வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் சீன அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் ஜெய்சங்கருடன் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. உக்ரைன் பிரச்சினையில் சண்டையை நிறுத்தி இருதரப்பினரும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்பதை சீன அமைச்சர் வாங் யீ , ஜெய்சங்கர் ஆகியோர் வலியுறுத்தினர்.
பாகிஸ்தானில் காஷ்மீர் குறித்த வாங் யீயின் பேச்சு ஆட்சேபத்துக்குரியது என்பதை விளக்கிய ஜெய்சங்கர், பாகிஸ்தானின் தீவிரவாதத் தொடர்புகள் குறித்து விவரித்தார்
Comments