15வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று ஆரம்பம்: முதல் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை

0 8748

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டியில் மொத்தம் 10அணிகள் மோதுகின்றன. லீக் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் மகாராஷ்டிர மாநிலத்திலேயே நடத்தப்படுகிறது. மும்பையில் உள்ள 3 மைதானங்களில் 55 ஆட்டங்களும், புனேயில் 15 ஆட்டங்களும் இடம் பெறுகிறது. பிளே-ஆப் மற்றும் மே 29-ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டி இடம் விவரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments