குலசேகரப் பட்டினத்தில் இருந்து விரைவில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் - இஸ்ரோ

0 2428

லசேகரப் பட்டினத்தில் இருந்து விரைவில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

இதற்கான நிலம் கையகப்படுத்த அனுமதி தந்த தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

சந்திராயன் 2 திட்டம் தோல்வி அடைந்த போதும் பிரதமர் மோடி ஒவ்வொரு விஞ்ஞானிக்கும் ஆறுதல் கூறி பெருந்தன்மையோடு முயற்சிகளைத் தொடரும் படி கேட்டுக் கொண்டதை நினைவுகூர்ந்த அவர் சந்திராயன் 3 விரைவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.

ககன்யான் திட்டம் மூலம் விண்ணுக்கு இந்தியரை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்தும் விளக்கிய அவர் 2 அல்லது 3 இந்திய விண்வெளி வீரர்களை 400 கிலோ மீட்டர் தூரத்தில் புவிவட்டப் பாதையில் பயணிக்கச் செய்து, 3 நாட்களுக்குப் பின் பூமிக்கு பத்திரமாக அழைத்து வர இருப்பதாகவும் சிவன் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments