மின்சார வாகனங்களில் பேட்டரி சுவாப்பிங் முறையை ஆதரிக்கும் சீன நிறுவனங்கள்..
மின்சார வாகனங்களில் செல்லும்போது பேட்டரி குறைந்தால் சார்ஜிங் மையங்களில் வைத்து சார்ஜ் ஏற்றும் முறையே சிறந்தது என டெஸ்லா உள்ளிட்ட பல நிறுவனங்கள் தெரிவித்து வரும் நிலையில், சார்ஜ் குறைந்த பேட்டரியை அகற்றி வைத்து விட்டு ஏற்கனவே முழு சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரியை பொருத்தி பயணத்தை தொடரும் முறையை சீனா ஆதரித்து வருகின்றது.
சீனாவின் இந்த பேட்டரி சுவாப்பிங் (battery swapping) எனும் முறையில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகவும், எதிர்காலத்தில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை உயரும்போது இந்த முறையை கடைப்பிடிப்பது கடினம் எனவும் டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சார்ஜிங் மையங்களில் வாகனத்தை நிறுத்தி சார்ஜ் செய்ய அதிக நேரம் பிடிப்பதாகவும், எதிர்காலத்தில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான வாகனங்களை சார்ஜ் செய்யும் போது மின் தொகுப்பு கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், பேட்டரியை மாற்றும் நடைமுறையில் 3 நிமிடங்களுக்குள் வேலை முடிந்துவிடும் எனவும் நியோ(Nio), ஜீலி(Geely) உள்ளிட்ட சீன நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மின்சார வாகன துறையில் அதிவிரைவு சார்ஜிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால் சார்ஜிங் மையங்களில் சார்ஜ் ஏற்றும் முறையே சிறந்தது என ஜெனரல் மோட்டர்ஸ், ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே இந்தியாவில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், பேட்டரி சுவாப்பிங்கை நடைமுறைப்படுத்த பிரத்யேக கொள்கை வகுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
Comments