அரசு பள்ளி ஆசிரியைக்கு 3-வது குழந்தைக்கு பேறு கால விடுப்பு வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.!
அரசு பள்ளி ஆசிரியைக்கு 3-வது குழந்தைக்கு பேறு கால விடுப்பு வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தர்மபுரி மாவட்டம் பி.கொல்லப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் உமாதேவி என்பவர், 3-ஆவது குழந்தைக்காக மகப்பேறு விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தார்.
அரசாணைப்படி இரு குழந்தைகளுக்கு மட்டும் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் எனக் கூறி, அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உமாதேவி வழக்கு தொடர்ந்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் மகப்பேறு பலன்களைப் பெறுவதற்காக குழந்தைகளின் எண்ணிக்கையில் மத்திய சட்டம் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என தெரிவித்து ஆசிரியைக்கு உரிய மகப்பேறுகால விடுமுறையை அளிக்க உத்தரவிட்டது.
Comments