துபாய்க்கு அரசு முறை பயணமாக முதலமைச்சர் சென்ற நிலையில், ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் ஆலோசனை

0 3817

துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அரசு முறை பயணமாக முதலமைச்சர் துபாய் சென்ற நிலையில், அந்நாட்டின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் அல் மர்ரி, வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் தானி பின் அகமதுவுடன் ஆலோசித்தார்.

இந்த சந்திப்பில், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழகத்திற்கும் இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், உணவுப் பதப்படுத்துதல், மின் வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள் போன்ற துறைகளில் முதலீடு செய்வது குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களை தமிழகம் வர அழைப்பு விடுத்த முதலமைச்சர், முதலீட்டாளர்கள் குழுவினை அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments