பிரியாணிக்கு வழங்கப்பட்ட குழம்பில் புழு இருந்ததாகக் கூறி சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்க மறுத்து ஹோட்டல் உரிமையாளருடன் தகராறில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கைது.!
சேலத்தில், பிரியாணிக்கு வழங்கப்பட்ட குழம்பில் புழு இருந்ததாகக் கூறி சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்க மறுத்து ஹோட்டல் உரிமையாளருடன் தகராறில் ஈடுபட்ட 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
சேலம் ஐந்து ரோடு பகுதியில் ஆதாம் பாஷா என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடைக்கு வந்த 6 இளைஞர்கள், பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். உணவு முழுவதையும் சாப்பிட்டுவிட்டு, பில் செலுத்தும் நேரத்தில் பிரியாணிக்கு வழங்கப்பட்ட குழம்பில் புழு இருந்ததாக கூறி தகராறில் ஈடுபட்டதோடு, அதனை வீடியோ எடுத்து உணவு பாதுகாப்புத் துறையினருக்கு அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையில், சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்குமாறு கூறிய ஹோட்டல் உரிமையாளரை தகாத வார்த்தையால் திட்டிய இளைஞர்கள், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் 6 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், ஹோட்டலுக்கு வந்து ஆய்வு செய்ததோடு புழு இருந்ததாக கூறப்படும் உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
Comments