வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது மண் சரிந்து விழுந்து விபத்து; இடர்பாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய இருவர் பத்திரமாக மீட்பு

0 2015

நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது மண் சரிந்த விபத்தில் இடர்பாடுகளில் சிக்கிய இருவர் பாதுகாப்பாக உயிருடன் மீட்கப்பட்டனர்.

நல்லிபாளையத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணி இன்று தொடங்கிய நிலையில், அஸ்திவாரம் தோண்டும் பணியில் 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்ததில் இரண்டு ஆண்கள் இடர்பாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரையும் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர். இருவரும் சிகிச்சைகாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments