ஒரு வயது குழந்தைக்கு மதுவுடன் சோறு ஊட்டி கொன்ற படு பாதகி...! ஐந்து காதல் அம்மணி கைது

0 3327

இன்ஸ்டாகிராம் காதலர்களுடன் ஊர் சுற்றுவதற்கு இடையூறாக இருந்ததாக, தனது ஒரு வயது ஆண்குழந்தைக்கு உணவுடன் மது ஊற்றி கொடுத்து கொலை செய்த கொடூர தாயை போலீசார் கைது செய்தனர்.

உதகை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீதா . இவரது 3 வது கணவர் கார்த்திக் இவர்களுக்கு 2 ஆண்குழந்தைகள் உள்ள நிலையில் , 3 திருமணத்துக்கு பின்னரும் காதலில் பிரேக் இல்லா டவுன்பஸ் போல இரு ந்த கீதா 4 வதாக ஒரு வரை இன்ஸ்டாகிராமிலும், 5 வதாக ஒருவரை தனது ஏரியாவிலும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

மனைவி கீதாவின் நடவடிக்கை பிடிக்காததால் , கார்த்திக் , தனது 3 வயது மகனை தன்னுடன் அழைத்துக் கொண்டு கோவைக்கு சென்று அங்கு தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இதற்கிடையே கடந்த மாதம் 14-ந் தேதி தன்னுடைய ஒரு வயது ஆண் குழந்தை திடீரென்று மயங்கி விழுந்ததாக கூறி உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் கொண்டு சென்றார் கீதா.

அங்கு அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உதகை நகர காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்த போலீசாருக்கு கீதாவின் நடவடிக்கைகள் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. பெற்றோரிடம் நடத்திய விசாரணையில் கீதாவின் விபரீத காதல் தொடர் ஓட்டம் வெளிச்சத்துக்கு வந்தது.

கீதாவுக்கு ஏற்கனவே 2 பேருடன் திருமணம் முடிந்து உள்ளது. அதில் ஒருவருடன் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த கீதா. 3-வதாக கார்த்திக்கை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கார்த்திக்கை விட்டு பிரிந்த கீதா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்த போது மேலும் சிலருடன் விபரீத காதல் மலர்ந்துள்ளது. தன்னை சிங்கிள் என்று கூறி அவர்களுடன் பழகிவந்த கீதாவுக்கு ஒரு வயது குழந்தை வீட்டில் இருப்பது இடையூறாக இருந்துள்ளது. மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் காதலர்களுடன் வெளியில் செல்ல இயலாமல் தவித்துள்ளாள்.

இதையடுத்து குழந்தையை சரிவர பராமரிக்காமல் பட்டினி போடுவதை வழக்கமாக்கிய கீதா, குழந்தைக்கு உணவூட்டும் போது காதலனுடன் சேர்ந்து குடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த மதுவை குழந்தைக்கு வாயில் ஊற்றி விட்டுள்ளார். இதனால் குழந்தைக்கு கடுமையான மூச்சுத்தினறல் ஏற்ப்பட்டு உள்ளது.

குழந்தையை தொட்டிலில் போட்டு தூங்க வைப்பது போல தொட்டில் துணியோடு சேர்த்து சுவற்றில் மோதவிட்டுள்ளாள். இதனால் மூச்சுத்தினறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்துள்ளது என்றும் இது கொடூரமான கொலை என்பதையும் பிணக்கூறாய்வு மூலம் கண்டறிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தையை கொலை செய்த கீதாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments