ஒட்டன்சத்திரத்தில் லேசான நிலநடுக்கம்? 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் - மக்கள் அச்சம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அதிகாலையில் 3 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக டெல்லி வான் இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கீரனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகாலை டம் டம் என்ற சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், பாத்திரங்கள் அசைந்து ஓடியதாகவும் கூறிய பொதுமக்கள் பீதியடைந்து குடும்பத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நில அதிர்வு காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் பழனி சார் ஆட்சியர் மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், கீரனூரில் அதிகாலை 4 மணி முதல் காலை 6.07 மணி வரை 3 முறை நில அதிர்வு ஏற்பட்டதாகவும், காலை 4.33 மணியளவில் 1.2 ரிக்டர் அளவிலும், காலை 6.04 மணிக்கு 1.5 ரிக்டர் அளவிலும், 06.07 மணியளவில் 1.5 ரிக்டர் அளவிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக டெல்லி வான்இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments