"எப்படிப்பட்ட நெருக்கடி வந்தாலும் பதவி விலக போவதில்லை" - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டம்

0 2536

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அந்நாட்டின் எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில், எப்படிப்பட்ட நெருக்கடி வந்தாலும் பதவி விலக போவதில்லை என இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மொத்தம் 342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில், ஆட்சி அமைக்க 172 இடங்கள் தேவைப்படும் நிலையில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாஃப் (Pakistan Tehreek-e-Insaf) கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 179 இடங்களை வென்று கடந்த 2018-ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில், இம்ரான் கானின் கட்சியை சேர்ந்த சுமார் 20 அதிருப்தி எம்.பிக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது இமரான் கானுக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் அவரது அரசு கவிழும் என கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் இதுவரை எந்த பிரதமரும் 5 ஆண்டு ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்யாத நிலையில், 2023 ஆம் ஆண்டு வரை இம்ரான் கானின் ஆட்சி நீடிக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments