ரூ.200 கோடி பிளஸ் பாக்ஸ் ஆபீஸில் வலிமை காட்டிய அஜீத்..! வசூல் சக்கரவர்த்தியானார்

0 12633

நடிகர் அஜீத்தின் வலிமை படம் வெளியான 25 நாட்களில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக படத்தின் தயாரிபாளர் போனிகபூர் அறிவித்துள்ளார்.

அஜீத்தின் உருவத்தை வைத்து கேலி... படம் ஒரே நாளில் காலி... என்று நெகட்டிவ் விமர்சனத்தால் வலிமை வெளியான அன்றே வரிசை கட்டி எதிராக வசைபாடியவர்களுக்கு பாக்ஸ் ஆபீஸில் தனது அளவற்ற வலிமையை படத்தின் வசூல் மூலம் நிரூபித்துள்ளார் நடிகர் அஜீத்..!

அஜீத்தின் வலிமை வெளியாகி 25 நாட்களை கடந்தும் பெரும்பாலான நகரங்களில் உள்ள மல்டிபிளக்ஸ்களில் வலிமை தற்போதும் ஓடிக் கொண்டு இருக்கின்றது.

வலிமை படம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்திருந்த நிலையில், சில வினியோகஸ்தர்கள் நட்டம் அடைந்துள்ளதாக கே.ராஜன் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

வலிமை வெற்றிப் படமா இல்லையா என்று ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில் வலிமை மகத்தான வெற்றிப்படம் என்பதை தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார்.

வலிமை வெளியான 25 நாட்களில் பாக்ஸ் ஆபீஸில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும், அஜீத் தன்னை வசூல் சக்கரவர்த்தி என்று நிரூபித்து உள்ளார் என்று புகழ்ந்துள்ளார்.

இதனை தனது டுவிட்டரிலும் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.  திரையரங்குகளில் 25 நாட்களை கடந்த நிலையில் வலிமை படம் ஒடிடி யில் வெளியாக இருப்பதாக போனிகபூர் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments