இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சீன வெளியுறவு அமைச்சர் சந்திப்பு
சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ, டெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ நேற்றிரவு டெல்லிக்கு வந்தார். இன்று அவர் சவுத் பிளாக்கில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சந்தித்துப் பேசினார். அதன்பின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். இரு நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் நிலையிலான பேச்சும் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து சீனப் படைகள் விரைவிலும் முழுவதுமாகவும் பின்வாங்க வேண்டும் எனச் சீன வெளியுறவு அமைச்சரிடம் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
Comments