காளை முட்டியதில் 14 வயது சிறுவன் படுகாயமடைந்து உயிரிழப்பு

0 1542

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பெரிய சப்படி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற விறுவிறுப்பான எருதுவிடும் விழாவில் காளை முட்டி 14 வயது சிறுவன் உயிரிழந்தான்.

போட்டியில் உள்ளூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வந்த 300 காளைகள் பங்கேற்று இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. ஏராளமான பொதுமக்கள் விழாவை கண்டு களித்து கொண்டிருந்த சமயத்தில் வேகமாக சீறிப்பாய்ந்து வந்துகொண்டிருந்த காளை கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த கட்லண்டி கிராமத்தை சேர்ந்த திவாகர் என்ற 14 வயது சிறுவனை முட்டிச் சென்றது.

இதில் கீழே விழுந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சூளகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments